Sunday, August 26, 2012

அடித்தளம்


அடித்தளம்

'‘ராஜாராம் - வாழ்நாள் சாதனையாளர், தென்னிந்திய மருத்துவர் சங்கம்'-விருதையே உற்று பார்த்துக்கொண்டிருந்தான் முத்துகுமார்.

கடந்த சில வாரங்களாக ஸ்டேசனுக்கு கூட போகாமல், காலை 8 மணிக்கெல்லாம்  புரொஃபசர் ராஜாராம் வீட்டில் அவருக்காக காத்திருப்பது அவனுக்கு பிடிக்கவில்லைதான். இருந்தாலும் அந்த கொலைகாரனை பிடிக்க தன்னிடமோ, தன் காவல் துறையிடமோ வேறு வழியில்லாமல் இந்த உளவியல் நிபுணரிடம் வந்திருப்பது புரிந்து , கோபத்தை  வெளியே காட்டாமல் உள்ளுக்குள்ளே நொந்துகொண்டான்.

முப்பத்து மூன்று வயதே ஆன எஸ்.ஐ.முத்துக்குமார், கொஞ்சம் இறுக்கமாகத்தான் காட்சியளித்தான். காவல்துறைக்கே உரித்தான மீசை, கருத்ததேகம், வலிமையான உடற்கட்டு. இன்னும் தன்னால் அந்த சீரியல் கொலைகாரனை பிடிக்கமுடியாமல் போனது என அனைத்தும் ஒன்றுசேர்ந்து அவனை மேலும் கடினமாக்கியது. அவன் சிந்தனையின் மத்தியல், அறைக்குள் நுழைந்தார்  புரொஃபசர் ராஜாராம்.

68 வயதில் புரொஃபசர் ராஜாராம், சார்ட்ஸ் டி-சர்ட் சகிதம் தோன்றுவது கூட அவன் இறுக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.

"வாப்பா! வந்து ரொம்ப நேரம் ஆச்சோ?"

"இல்ல சார். இப்ப தான் வந்தேன். அப்புறம் அந்த கொலைகாரன பத்திய கேஸ் ஸ்டெடி ஃபைல்ஸ் இன்னிக்கு கொடுக்கிறதாசொன்னீங்க. அதான் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்", முத்துகுமார்.

"நேத்து ராத்திரியே முடிச்சுட்டேன். ஆனால்.."

முத்துகுமாரின் புருவங்கள் கேள்வி குறியாய் மாறின. "ஆனால்?"

"முதல்ல நீங்க, போலீஸ் காரங்க இந்த சீரியல் கில்லரை பிடிக்க என்னென்ன செஞ்சீங்கன்னு தெரியனும். காரணம், எனக்கு என் ஊகத்தில் சில சந்தேகங்கள் இருக்கு. அதை நான் உங்களுக்கு கொடுக்கும் முன்ன சரி செய்யனும். இல்லையா?"

"உங்களுக்கு தெளிவா சொல்லிடறேன் சார். ராம் நகரில்  கடந்த  பதினாலு மாசத்தில், தொடர்ந்து 5 கொலை. அத்தனையும் பெண்கள். அதுவும் சமீபத்தில் கல்யாணமான புது பெண்கள். கொலை செய்த முறை, அத்தனை பெண்களையுமே, அவர்களுடை 'பிரா'வை வைத்து, கழுத்தை நெரித்துக் கொலை."

புரொஃபசர், "யாரையெல்லாம் இன்வஸ்டிகேட் பண்ணுனீங்க?"

"கொலைகாரன் அதே தெருவில் வசிப்பவன் என்பது எங்களுக்கு முடிவாகிவிட்டது. காரணம், வெளி ஆட்கள் அந்த தெருவில் நுழைய முடியாது. செக்கியூரிட்டி சிஸ்டம் நல்லா இருக்கு. அதனால், எங்களுடயை முதல் சந்தேகம் அங்கிருக்கும் பேச்சுலர்ஸ். இரண்டு பேர்தான். ஒருவன் பேங்கில் வேலை. மற்றவன், மாருதி சோரூமில் சேல்ஸ் மேனேஜர். ரெண்டு பேரூம் அப்பா அம்மா கூட தங்கியிருக்காங்க. விசாரித்ததில், ரெண்டுபேருமே கிளீன். பின்ன, எல்லாரையும் ரெகுலர் இன்வஸ்டிகேசன் செய்தோம். குறிப்பிடும்படியா எந்த தகவலும் இல்லை"

"குட்! அந்த தெருவில் யாராவது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர், கொஞ்சம் குட்டையா, கண்ணாடி போட்டுட்டு குழந்தையில்லாம இருக்காரா?"

முத்துக்குமாரின் முகம் மாறியது, ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனாலும், அதை காட்டிக்கொள்ளாமல், "ஆமாம் சார். ஒரு லைப்ரரியன் இருக்கார்"

புரொஃபசர், "அவரை அரஸ்ட் பண்ணி, அவருடைய குழந்தை பருவத்தை பற்றி விசாரிங்க. குறிப்பா ஆறு வயசுவரை எதாவது வினோதமா நடந்ததானு பாருங்க. அப்படி எதாவது இருந்தால், கேஸ் ஓவர்



ரியாக ஒரு வாரம் கழித்து டி.ஐ.ஜி அலுவலகத்தில் புரொஃபசர் ராஜாராமிற்கு சிறியவில் ஒரு பாராட்டு விழா நடந்தது.

டி.ஐ.ஜி.சுசீந்தரன், "சொன்னா நம்பமாட்டீங்க புரொஃபசர். மூனுநாள் அவன டார்ச்சர் செய்தும், ஆளு கொஞ்சம் கூட வழிக்கு வரலை. கடைசியா உங்க ரிப்போர்ட்ட படிச்சு காட்டிய பிறகு, உடனே உண்மைய ஒத்துகிட்டான். ஆனால் உண்மைய சொல்லனும்னா, எங்களுக்கு இன்னுமே இந்த முடிச்சு அவுக்க தெரியல "

புரொஃபசர் ராஜாராம், "போலீஸ் காரங்க விட்டுவிட்ட ஒன்னே ஒன்னு, சஸ்பெக்ட்ஸோட குழந்தை பருவத்தை விசாரிக்காததுதான். என்னை போன்ற உளவியல் நிபுனர்கள் அதிகம் நம்புவது, அகோரமான கொலைகள் செய்யும் இதுபோன்ற சீரியல்கில்லர்கள் உருவாவதற்கான அடித்தளம் ஒரு குழந்தையின் ஆறு வயதிற்குள்ளேயே அமைந்து விடுகிறது. இந்த கொலைகாரன் தன் தாய் வேறொரு ஆணுடன் கொண்ட கள்ள உறவை பார்த்து வளர்ந்திருக்கிறான். அதனால் பெண்களை, குறிப்பாக கல்யாணம் ஆன பெண்களை வெறுத்தான். மேலும்  குழந்தைகள் தங்களுடைய சிறுவயதில் பார்க்கும் கோரமான அனுபவங்கள்தான் பிற்காலத்....."

இந்த விழாவிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் முத்துகுமார், ஒரு மூலையில் அமர்ந்து, எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். முகம் மேலும் இறுகியிருந்தது. தான் சற்று முயன்றிருந்தால், இந்த விழா தனக்காக நடந்திருக்கும் என்று நினைத்து அங்கலாய்ப்படைந்திருந்தான்.



அன்று இரவு முத்துகுமார் வீட்டில்..

ண்டி, புருசன் நான் கூப்பிடறேன். உனக்கு அப்படி என்ன அலுப்பு. இதே எவனாவது வெள்ளத்தோல்காரன் கூப்பிட்டிருந்தா போயிருப்ப. இல்ல?"

கவிதா, முத்துகுமரின் மனைவி, அவனது அறையின் விளைவாக கன்னத்தில் பதிந்த முத்துகுமாரின் கைரேகையை தடவிக்கொண்டே, "தயவு செய்து புரிஞ்சுக்கோங்க. என்னால இன்னிக்கு முடியாது. நான் பீரியட்ஸ்ல இருக்கேன்.ப்ளீஸ்....."

மீண்டும் அவள் கன்னதில் விழுந்த அறையை, கதவு இடுக்கில், அதிர்ந்த முகத்துடன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் முத்துகுமாரின்   ஐந்து வயது மகன்.



---முற்றும்--- 

மதிப்பு !


மதிப்பு

"திரு. மாதவன் ராவ்இரண்டு கோடியே நாற்பது லட்சம். மேலும் ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்!”"

மூன்று முறை மணி ஒலிப்பியபின் அந்த ஓவியத்தின் ஏலம் முடிவுக்கு வந்தது.மாதவன் ராவின் செக்ரட்டரி நிருபமா, தன் பையில் இருந்த காசோலையை பூர்த்தி செய்யத்தொடங்கினாள்.

"உங்க பாஸ் ரொம்ப லக்கி மேடம். ஓவியர் செழியனோட பெயிண்டிங் கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்.”"

"உண்மையாகத்தான். இந்த பெயிண்ட்டிங், எங்க பாஸ் பல நாள் ஆசைபட்ட ஒன்னு. அதனால் தான் அவர் தினமும் இங்கு வந்து அந்த பெயிண்டிங்கை பல மணிநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். லகில் இருக்கும் அத்தனை இம்ப்ரெஸனிஸ்டோட பெயிண்டிங்கையும் சேகரிக்கறதுதான் எங்க பாஸோட மிகப் பெரிய லட்சியம். அதுக்கு அவர் எத்தனை கோடியையும் செலவு செய்வார்."

"மேடம். ஒரு சின்ன வேண்டுகோள்.”"

"சொல்லுங்க"

"ஓவியர் செழியனுக்கு எங்க சபா சார்பில் ஒரு விழா எடுக்கிறதா முடிவு செய்திருக்கோம். அது வைரக்கும்  இந்த பெயிண்டிங்  இங்கு  இருந்தால் நல்லா  இருக்கும். கொஞ்சம் தயவு பண்ணி...."

"என்னால எதுவும் இப்போ சொல்ல முடியாது சார். இதில் எங்க பாஸ்தான் முடிவு சொல்லனும். நான் எதற்கும் உங்களுக்காக பேசி பார்கிறேன்.”"

"நல்லது மேடம்."

காசோலையை சபா செக்ரட்டரியிடம் கொடுத்துவிட்டு, பெயிண்டிங்கிற்கான உரிம்மப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு  விடைபெற்றாள் நிருபமா.



மறுநாள்.

"ஹலோ! எம்.எஃப்.எஸ் சபா?"

"ஆமாம். நீங்க?"

மறுமுனையில் தொடர்ந்தாள் நிருபமா. "நான் மிஸ்டர்.மாதவன் ராவோட செக்ரெட்டரி பேசறேன்.”"

"சொல்லுங்க மேடம். ங்க போன் காலைத்தான் எதிர்பார்த்து இருந்தோம். சார் என்ன சொன்னாருங்க?"

"சார் சம்மதிச்சுட்டார். னால், எந்த டேட் வரை பெயிண்டிங் உங்களுக்குத்  தேவைபடும்னு தெரியனும்!"

"வருகிற 27ஆம் தேதி மாலை விழா வச்சிருக்கோம்மறுநாள் காலையே நீங்க எடுத்துகலாம்.”"

"சரி. னால் பெயிண்டிங்க்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கனும். ங்க பாஸ் அந்த பெயிண்டிங்கை அவர் உயிரைவிட மேலாக பார்கிறார். அதனால், பெயிண்டிங்க்கு ஒரு சிறு பாதிப்பு வந்தால் கூட, உங்க சபா பெரிய விலைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்”"

"பெயிண்டிங் எங்கள் பொறுப்பு மேடம்.   ஓவியத்தோட மதிப்பு தெரிஞ்சவங்க நாங்க. அதனால் முழு பாதுகாப்போட இருக்கும்.”"

"நல்லது."”

"மேலும் ஒரு சின்ன  வேண்டுகோள் மேடம். விழாவிற்கு மாதவன் சாரும் வந்தா நல்லா இருக்கும்.  ஓவியத்தோட உரிமையாளர் என்பதைத் தாண்டி, இம்ப்ரெஸனிசத்தை உண்மையா ரசிக்கிற  ரசிகர். அதனால் அவர் வந்தால், இந்த விழா இன்னும் சிறப்பா இருக்கும்னு சபா சார்பா கேட்டுகறோம்."”

“"ஒரு நிமிடம். நான் பாஸிடம் கேட்டுட்டு சொல்றேன்”"

சிறிது நேரம் கழித்து..” "மன்னிக்கவும், பாஸ்   27ஆம் தேதி ஒரு முக்கியமானதொழில்சங்க சந்திப்பில் கலந்துகொள்ளவேண்டி உள்ளது.  அதனால் அவர் வரமுடியாது. இருந்தாலும், பாஸ் சார்பில், ஒரு பாராட்டு கடிதம் உங்களை வந்து சேரும் என தெரிவிக்கச்சென்னார்.”"



27ஆம் தேதி மாலை விழா நிறைவு கட்டத்தை எட்டியிருந்தது.

ஓவியத்தின் முன் சிறிய மேடை அமைத்து, கலைத்துறை அமைச்சர், சபா   நிர்வாகிகள் மத்தியில் செழியன் அமர்ந்திருந்தார். செழியனின்  கனிவான முகத்தில், மெளிதாக கோபம் தலைகாட்டியிருந்ததை யாரும் கவனிக்க தவறவில்லை.

"உலகில் பிசாரோ போல், மோனே போல், சிஸ்லி போல் இம்ப்ரெஸனிசத்தில் நம் நாட்டிலும் ஒரு உலகத்தர கலைஞன் இருப்பது நம் எல்லோருக்கும் பெருமை.. நன்றி  திரு.செழியன் அவர்களே. கடந்த ஐம்பது நாட்கள் தங்களது ஓவியத்தை எங்கள் சபாவில் கொண்டதற்காகவும், தங்களது   வருகையினாலும்  நாங்கள்  மிகவும் பெருமை அடைகிறோம். மீண்டும் ங்களுக்கு....”"

முடிவுரையை முழுவதும் கேட்காமலும் கூட செழியன் மேடையைவிட்டு வெளியேறினார். அவர் முகத்தில் இருந்த கோபம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. னால் காரணம் தான் ஒருவருக்கும் புரியவில்லை.

விரைவாக அவரை பின் தொடர்ந்து அவர் காரினுள் ஏறும் போது காரணத்தை பணிவுடன் வினவினார் சபா செக்ரெட்டரி.

செழியன் இறுதியாக வாய்திறந்து, "யோவ். ஐம்பது நாளா என்னத்தையா கிழிச்சீங்க? ஒருத்தனுக்கு கூடவா என் பெயிண்டிங் தலைகீழா மாட்டியிருந்தது தெரியலை?”."

செக்ரெட்டரியின் மன்னிப்பிற்கு காத்திராமல் செழியனின் கார், தெரு எல்லையை சென்று மறைந்தது.




---முற்றும்---